முகப்பு
வேலூர்

மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

அரக்கோணம் அருகே சீரான மின்விநியோகம் கோரி, மின்வாரிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுகிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 15 மே, 2018 at 4:25 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

அரக்கோணம் அருகே சீரான மின்விநியோகம் கோரி, மின்வாரிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு
கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணத்தை அடுத்த பள்ளூரில் தமிழ்நாடு மின்வாரியத்தின் துணைமின்நிலையம் உள்ளது. இங்கிருந்து பள்ளூர், கோவிந்தவாடி அகரம், கம்மவார்பாளையம், திருமால்பூர், கணபதிபுரம், சயனபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் அளிக்கப்படுகிறது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்த உயர்அழுத்த மின்மாற்றி கடந்த 7-ஆம் தேதி பழுதடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மின்மாற்றியை தயாரித்து அளித்த குஜராத்தில் உள்ள நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, புதிய மின்மாற்றியை அனுப்ப அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இந்த உயர்அழுத்த மின்மாற்றி இயங்காததால், இந்த துணை மின் நிலையத்துக்குக் கீழ்உள்ள கிராமங்களுக்கு மின் விநியோகம் கடந்த ஒரு வாரமாக சீராக அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வீட்டு மின்இணைப்புகளுக்கு மட்டும் மற்ற துணை மின்நிலையங்களில் இருந்து மாற்று மின்சாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உயர்அழுத்த மின்விநியோகம் இல்லாததால் இந்தக் கிராமங்களில் உள்ள விசைத்தறிகளை இயக்கமுடியாமல் தறி உரிமையாளர்களும், விவசாயத்துக்கு நீரிறைக்கும் பம்பு செட்டை இயக்கமுடியாமல் விவசாயிகளும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தறிஉரிமையாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து, திங்கள்கிழமை பள்ளூர் துணைமின்நிலையத்தில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, அவர்களிடம் பேசிய உதவி செயற்பொறியாளர் கண்ணன், புதிய உயர்அழுத்த மின்மாற்றி குஜராத்தில் இருந்து வந்து கொண்டு இருக்கிறது. போக்குவரத்துக்காக பத்து நாள்கள் தேவைப்படும் நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் அது வந்துவிடும். எனவே, ஒரு வாரத்தில் மின்விநியோகம் சீராகும் எனத் தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.