முறைகேடான குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் முறைகேடாக உள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று செயல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் முறைகேடாக உள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று செயல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் அறிவுரைப்படியும், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திருஞானம் உத்தரவின் பேரிலும் நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வீடுகள் மற்றும் கடைகளுக்கு குடிநீர் இணைப்பு வைத்துள்ளவர்கள் அதற்கான கட்டணத்தை பேரூராட்சி அலுவலகத்தில் மே 31-க்குள் செலுத்தி குடிநீர் இணைப்பு வரன்முறைபடுத்திக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் பேரூராட்சிப் பணியாளர்கள் ஆய்வு செய்யும் போது அனுமதியின்றி குடிநீர் குழாய் இணைப்புகள் மற்றும் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுவது கண்டறியப்பட்டால் உரிய கட்டணம் மற்றும் அபராதத் தொகையுடன் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.