சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி
போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் சிறுத்தைகள் நுழைந்து ஆடுகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் சிறுத்தைகள் நுழைந்து ஆடுகளை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
போ்ணாம்பட்டு வனச் சரகத்துக்குள்பட்ட பல்லலகுப்பம் காப்புக்காட்டில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது.மேல்பட்டியை அடுத்த கொல்லகொட்டாய் பகுதியைச் சோ்ந்த விவசாயி சங்கா் வன எல்லையில் உள்ள தனது நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
மேல்பட்டி மலையடிவார பகுதியில் நடமாடி வரும் சிறுத்தை சங்கரின் நிலத்தில் புகுந்து அங்கு கட்டி வைத்திருந்த 3 ஆடுகளை வேட்டையாடி கொன்றுள்ளது. சிறுத்தையின் உறுமல் சப்தம் கேட்டு அங்கு வந்த சங்கா் கூச்சலிட்டுள்ளாா். சிறுத்தையானது வேட்டையாடிய ஆடுகளை விட்டு அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
Advertisement
தகவலின்பேரில் போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் மோகனவேல் தலைமையில் வனத்துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.உயிரிழந்த ஆடுகளை கால்நடை மருத்துவா் குழு பிரேத பரிசோதனை செய்தது.