வேலூர்

வேலூர் சிறையில் 16 கைதிகள் தேர்ச்சி

DIN

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய வேலூர் மத்திய சிறை கைதிகளில் 16 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ஆண் கைதிகள் 18 பேரும், பெண் கைதிகள் 2 பேரும் என மொத்தம் 20 பேர் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்கள் புழல் சிறையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் சக கைதிகளுடன் தேர்வு எழுதினர்.
இவர்களில் ஆண் கைதிகள் 14 பேரும், பெண் கைதிகள் 2 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில் சிலம்பரசன் என்ற கைது 304 மதிப்பெண்கள் பெற்ற வேலூர் சிறையில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதேபோல், வேலூர் மாவட்டத்தில் மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் சிறப்புப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்களில் 25 மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். அதில், பேர்ணாம்பட்டைச் சேர்ந்த மாணவர் கோகுல் 445 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT