வேலூர்

ரூ. 116.68 கோடி மோசடி: திருவள்ளுவர் பல்கலை. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வரவு - செலவு கணக்குத் தணிக்கையில் 2002-03 முதல் 2015-16-ஆம் ஆண்டு வரை ரூ. 116.67 கோடி கணக்கில் வராமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான புகார்கள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் பல்கலைக்கழக தொழிலாளர்  சங்கத்தினர் வேலூரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கௌரவத் தலைவர் அய்.இளங்கோவன் தலைமை வகித்தார். தலைவர் க.சிவா, பொதுச்செயலர் மா.மணிவண்ணன், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி.நிரூபன்சக்கரவர்த்தி, ஏயூடி தலைவர் பி.சாந்தி, பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க கௌரவத் தலைவர் என்.செந்தாமரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், வேலூர் மாவட்டம், சேர்க்காட்டில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 2002-03-ஆம் கல்வியாண்டு முதல் 2015-16-ஆம் ஆண்டு வரையிலான வரவு - செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டதில், இதுவரை ரூ. 116 கோடியே 67 லட்சத்து 51 ஆயிரத்து 478 தொகை கணக்கில் வராமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 இதுதொடர்பாக, தமிழக ஆளுநர், உயர்கல்வித் துறை செயலர், நிதித்துறை செயலர், பல்கலைக்கழக மானியக் குழுச் செயலர், உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கும் 46 மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும், இந்த முறைகேடுகள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த முறைகேடு மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 
மேலும், பல ஆண்டுகளாக பொறுப்பு அலுவலர்களைக் கொண்டே இயக்கப்படும் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர், நிதி அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கு நிரந்தரமாக அலுவலர்களை நியமித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை கழுத்தில் தொங்கவிட்டபடி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக அலுவலர்கள், முன்னாள் அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT