முகப்பு
வேலூர்

மணல் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்; 2 பேர் கைது

ஆற்காடு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 3 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 12:51 AM
பகிர்:

ஆற்காடு பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 3 லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ஆற்காடு பாலாற்றுப் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில், ஆற்காடு கிராமிய போலீஸார் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு  ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 டிப்பர் லாரிகளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அதில், எசையனூர் பாலாற்றிலிருந்து திருட்டுத்தனமாக மணல் எடுத்து செல்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 3 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர். 
மேலும், லாரியை ஓட்டி வந்த மல்லிகாபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் (28), எசையனூர் பகுதியைச் சேர்ந்த தனசேகர் (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், தப்பிச் சென்ற  கார்த்தி என்பவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.