வேலூர்

ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

DIN


ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆம்பூர் வருவாய்த் துறை கிராமச் சாவடி எதிரே சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூரில் அண்ணா நகர், ரபீக் நகர், சலாவுதீன் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் ரயில்வே இருப்புப் பாதையோரம் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருபவர்களை தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கூறி ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனால் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்படுவதாகக் கூறி, ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஆர். தேவதாஸ் தலைமை வகித்தார். ஆம்பூர் நகரத் துணைச் செயலாளர் கே.எஸ். ஹசேன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். சுகர் பெடரேஷன் மாநிலச் செயலாளர் கு. மனோகரன், நிர்வாகிகள் பாரூக், துரைராஜ், இலியாஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆம்பூர் நகரச் செயலாளர் டி. பாரத்பிரபு நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT