வேலூர்

ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் செம்மரக் கட்டைகள் கடத்தல்

DIN

ராணுவம் (ஆர்மி) என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் கடத்தப்பட்ட செம்மரக் கட்டைகளை சிறப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: திருப்பதியை அடுத்த ஜீவகோனா வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை காலை செம்மரக்
கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது ராணுவம் (ஆர்மி) என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு கார் அவ்வழியாக சென்றது. இதைக் கண்ட போலீஸார் அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்திய செம்மரத் தொழிலாளிகள் அதில் செம்மரக்கட்டைகளை ஏற்றினர். 
இதைக் கண்ட போலீஸார் விரைந்து சென்று காரை முற்றுகையிட்டனர். போலீஸாரைக் கண்டவுடன் செம்மரத் தொழிலாளிகள் செம்மரக் கட்டைகளைப் போட்டு விட்டு தப்பியோடி தலைமறைவாயினர். இதையடுத்து அங்கிருந்த 4 செம்மரக் கட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அதன்பின் வனத்திற்குள் மோப்ப நாய் கங்காவுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 
மோப்ப நாயின் உதவியுடன் வனத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 செம்மரக் கட்டைகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT