வேலூர்

தேர்தல்: திருப்பதியில் தயார் நிலையில் ஆயுதப்படை வீரர்கள்

திருப்பதியில் வியாழக்கிழமை (ஏப்.  11) வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால், ஆயுதப்படை வீரர்கள், போலீஸார் தீவிர

DIN

திருப்பதியில் வியாழக்கிழமை (ஏப்.  11) வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால், ஆயுதப்படை வீரர்கள், போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக திருப்பதி நகர காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் தெரிவித்தார்.
 இதுகுறித்து புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறியது: 
 திருப்பதி நகர்ப்புற பகுதியில் திருப்பதி, சந்திரகிரி, ஸ்ரீகாளஹஸ்தி, நகரி (பகுதி), சத்யவேடு (பகுதி) உள்ளிட்ட பகுதிகளில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலுக்காக 836 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் 2,104 பேர் பாதுகாப்புப் பணியில் ஆயுதம் தாங்கிய வீரர்களும், போலீஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப் பதிவு மையங்களின் அருகில் காவல் துறை சட்டம் 30 மற்றும் பிரிவு 144 சி.ஆர்.பி.எஸ்.சி. அமல்படுத்தப்பட்டுள்ளது. 235 கிராமங்கள் மிகவும் பதற்றமானவையாகக் கருதப்பட்டுள்ளன. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT