வேலூர்

அறிவித்தபடி நாளை இடைத்தேர்தல்: ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்

DIN

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்ட போதிலும் ஏற்கெனவே அறிவித்தபடி அரக்கோணம் மக்களவைத் தொகுதி மற்றும் சோளிங்கர், ஆம்பூர், குடியாத்தம் (தனி) ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெறும் என்று மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆணையின்படி, வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெறுவதாக இருந்த வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், வேலூர் மாவட்டத்திலுள்ள அரக்கோணம் மக்களவைத் தொகுதி மற்றும் சோளிங்கர், குடியாத்தம் (தனி), ஆம்பூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஏற்கெனவே அறிவித்தபடி வியாழக்கிழமை நடைபெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT