முகப்பு
வேலூர்

அரசுப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

பேர்ணாம்பட்டை அடுத்த கோக்கலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 பிப்ரவரி 2019, 7:15 am IST
பகிர்:

பேர்ணாம்பட்டை அடுத்த கோக்கலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு, பள்ளித் தலைமையாசிரியர் சுரேஷ் தலைமை வகித்தார். ஆசிரியர் ஹரிஹரன் வரவேற்றார். குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். சாலை விதிகள் குறித்தும், சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும், தலைக் கவசம்  அணிவதன் அவசியம் குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சியில், ஆசிரியைகள் வினோதினி, வரலட்சுமிரேவதி, ரேணுகா, கவியழகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.