முகப்பு
வேலூர்

சாலை விபத்தில் விவசாயி சாவு

நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் சிக்கி மொபெட் தீப்பிடித்து எரிந்த விபத்தில் தீக்காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் இறந்தார்.

Updated On : 25 பிப்ரவரி 2019, 7:16 am IST
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே விபத்தில் சிக்கி மொபெட் தீப்பிடித்து எரிந்த விபத்தில் தீக்காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் இறந்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் அருகே உள்ள வேப்பல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(30). விவசாயியான அவர் கடந்த 8-ஆம் தேதி வெலகல்நத்தம் பையனப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மொபெட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அவரது மொபட் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் ஆறுமுகத்தின கை, கால், உடலில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்ட உறவினர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் ஞாயிற்றுக்கிழமை காலை இறந்தார். இது தொடர்பாக நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.