அரக்கோணம் ரயில்வே பொறியியல் பணிமனையில் தீ விபத்து
அரக்கோணத்தில் உள்ள ரயில்வே பொறியியல் பணிமனையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
அரக்கோணத்தில் உள்ள ரயில்வே பொறியியல் பணிமனையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
அரக்கோணத்தில் உள்ள ரயில்வே பொறியியல் பணிமனையின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கழிவுகள் செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்தன. 10 அடி உயரத்துக்கு தீப்பிடித்து
எரிந்தது. இதையடுத்து அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், வேறு எந்த இயந்திரத்துக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பணிமனை அலுவலர்கள் தெரிவித்தனர்.