திமுக ஊராட்சி சபைக் கூட்டம்
ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாலாஜாபேட்டை வட்டம், சென்னசமுத்திரம் கிராமத்தில்
ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாலாஜாபேட்டை வட்டம், சென்னசமுத்திரம் கிராமத்தில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான ஆர்.காந்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சுந்தரம், வாலாஜாபேட்டை ஒன்றியச் செயலர் சேஷாவெங்கட், ஊராட்சிச் செயலர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.