வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ராணிப்பேட்டை வழக்குரைஞர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை வழக்குரைஞர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் 2019-20ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் சங்க அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலை மூத்த வழக்குரைஞர் டி.பாலகிருஷ்ணன் பொறுப்பேற்று
நடத்தினார்.
இதில் சங்கத் தலைவராக வழக்குரைஞர் எஸ்.மனோகரன், செயலாளராக வழக்குரைஞர் ஜெ.வேதநாயகம், துணைத் தலைவராக வழக்குரைஞர் வி.ராஜா, இணைச் செயலாளராக வழக்குரைஞர் ஜெ.தர்மராஜா, பொருளாளராக வழக்குரைஞர் எம்.சரவணன், நூலகராக வழக்குரைஞர் எஸ்.சந்தானலட்சுமி ஆகியோரும், வழக்குரைஞர் எம்.ஜெயக்குமார் உள்பட 10 பேர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, புதிய நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்கள், சக வழக்குரைஞர்கள், அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.