வேலூர்

இயற்கை வளங்களைப் பாதுகாக்க அதிக மரக்கன்றுகளை நட வேண்டும்: விஐடி துணைத் தலைவர்

DIN


இயற்கை வளங்களைப் பாதுகாக்க அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று விஐடி துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் கூறினார் . 
சுவாமி விவேகானந்தர் பேரவை சார்பில் ஆற்காடு, திமிரி, வாலாஜாப்பேட்டை ஒன்றியங்களில் உள்ள 42 அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் 3  இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி, பரிசு வழங்கும் விழா ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. 
விழாவில் ஜி.வி. செல்வம் பங்கேற்று மாணவர்களுக்குப் பரிசு வழங்கிப் பேசியது: 
நீட் தேர்வைக் கண்டு மாணவர்கள் பயப்படக் கூடாது. நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தன்னம்பிக்கையோடு படித்தால் அனைவரும் வெற்றி பெறலாம்.
மக்களாகிய நாம் தண்ணீரை சேமிக்க வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். தண்ணீர் தேவைக்கும் நாம் சுவாசிக்கும் பிராண வாயுவுக்கும் அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றார்.
ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்லத் தலைவர் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தார். அண்ணாமலையார் அறக்கட்டளைத் தலைவர் கு.சரவணன், மகாத்மா காந்தி அறக்கட்டளைத் துணைத் தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சரஸ்வதி வித்யாலயா பள்ளித் தலைமையாசிரியர் நகராஜன் வரவேற்றார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகி ஆர்.சீனிவாசன், வணிகர் சங்கத் தலைவர்கள் வி.மணி (ராணிப்பேட்டை), வி.டி.செல்வராஜ் (திமிரி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT