வேலூர்

லட்சார்ச்சனைப் பெருவிழா

DIN

குடியாத்தம் செதுக்கரை சுயம்பு செல்வ விநாயகர் கோயிலில் ஏகதின சகஸ்ரநாம லட்சார்ச்சனைப் பெருவிழா (நாணயங்களைக் கொண்டு ஒரு லட்சம் அர்ச்சனை) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 5.30 மணிக்கு கோ பூஜை, 6 மணிக்கு லட்சுமி, கணபதி ஹோமம்,  8 மணிக்கு கலச அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு சிறப்பு  அபிஷேக,  ஆராதனைகள்  நடைபெற்றன. 9 மணிக்கு லட்சார்ச்சனை தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது. மீண்டும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றது. காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பக்த ஜனசபா தலைவர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், நிறுவனர் ஜே.கே.என்.பழனி, செயலர் கே.எம். பூபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT