வேலூர்

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

DIN


வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் மக்களவைத் தேர்தலின்போது பதிவாகும் வாக்குகள் வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடி அருகே உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் அமைய உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட உள்ளன.
தற்போது வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இப்பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான அ.சண்முக சுந்தரம் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பார்த்தீபன், சார்-ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT