வேலூர்

சோதனையில் ரூ. 3.62 லட்சம் பறிமுதல்

DIN

தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றதாக நகை வியாபாரியிடம் இருந்து ரூ. 3.62 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகனச் சோதனை உள்ளிட்ட கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை மதியம் வரை நடத்தப்பட்ட சோதனையில், மொத்தம் ரூ. 2.69 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேலூர் கொணவட்டம் அருகே அணுகு சாலையில் நிலைக் கண்காணிப்புக் குழு அலுவலர் சுதாகர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் சென்னையைச் சேர்ந் நகை வியாபாரியான ஜிதேந்தர் ரூ. 3.62 லட்சம் வைத்திருந்தது தெரியவந்தது. அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தத் தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்து வேலூர் வட்டாட்சியர் ரமேஷிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT