வேலூர்

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

DIN

வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. 
சென்னையிலுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முகாமுக்கு, கல்லூரியின் துணைத் தலைவர் என்.ஜனார்த்தனன் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் என்.ரமேஷ் முகாமைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் எம்.ஞானசேகரன், வரவேற்றார். இதில், ஃபோர்டு  நிறுவனத்தின் முதன்மை மேலாளர் (மனித வளப் பிரிவு) வெங்கட் பாலாஜி தலைமையில் அதிகாரிகள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்திலுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான இளைஞர்களைத் தேர்வு செய்தனர். 
 முகாமில், பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து சுமார் 560 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இவர்களில் நேர்காணலுக்கு 250  மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி இயந்திரவியல் பேராசிரியர் எஸ். அருண்குமார், கல்லூரி வேலை வாய்ப்பு அதிகாரி பி.சரவணன்  செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT