வேலூர்

மணல் சரிந்து தொழிலாளி பலி:  3 பேர் காயம்

DIN

அரக்கோணம் அருகே நந்தி ஆற்றில் உரிமம் இல்லாமல் அள்ளியபோது மணல் சரிந்ததில் மாற்றுத் திறனாளி தொழிலாளி இறந்தார். 3 பேர் காயமடைந்தனர். 
வளர்புரம் கிராமத்துக்கு அருகே நந்தி ஆற்றில் அப்பகுதியைச் சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளியான தங்கவேலு (27) மற்றும் சர்ச்சில்தாஸ், ஏழுமலை, நாகராஜ் ஆகிய 4 தொழிலாளர்கள் உரிமமின்றி வியாழக்கிழமை  மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மணல் சரிந்ததில் 4 பேரும் மணலின் அடியில் சிக்கினர். அருகே இருந்தவர்கள் 3 பேரை மீட்டனர்.  தங்கவேலு மூச்சுத் திணறி இறந்தார். 
இதையடுத்து தங்கவேலுவின் சடலத்தை கிராம மக்கள், அவரது வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். இதையறிந்த வளர்புரம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அங்கு சென்று, தங்கவேலுவின் சடலத்தைக் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உரிமமின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த வளர்புரத்தைச் சேர்ந்த ஜோதி (41),  டிராக்டர் ஓட்டுநர் பள்ளியாங்குப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். விபத்து நடந்த இடத்தை அரக்கோணம் டிஎஸ்பி விஜயகுமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT