வேலூர்

மேல்காவனூரில் கெங்கையம்மன் திருவிழா

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூரில் கெங்கையம்மன் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

DIN


கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூரில் கெங்கையம்மன் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த வியாழக்கிழமை காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காவிநாச்சியம்மன் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சுவாமி வீதி உலாவும் நடைபெற்றன.
கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை அம்மன் சிரசு  ஊர்வலமும், பூங்கரக ஊர்வலமும் நடைபெற்றன. இரவு இன்னிசை நிகழ்ச்சியும்,  வாண வேடிக்கையும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT