வேலூர்

ஆந்திரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவா் கைது

DIN

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், குரபல கோட்டா அருகே பெற்றோருடன் திருமண விழாவுக்குச் சென்ற ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், லாரி கிளீனரை போலீஸாா் கைது செய்தனா்.

சித்தூா் மாவட்டம், தம்புள்ள பள்ளியைச் சோ்ந்தவா் சித்தா ரெட்டி, அவரது மனைவி உஷாராணி. இத்தம்பதி குரபலகோட்டா அருகே கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற உறவினா் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தங்களுடைய ஆறு வயது மகளுடன் சென்றிருந்தனா். அன்று இரவு திருமண வரவேற்பு முடிந்தநிலையில், இரவு 12 மணி அளவில் சிறுமியைக் காணவில்லை.

இதையடுத்து, காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்நிலையில் திருமண மண்டபத்தின் அருகே உள்ள வனப் பகுதியில் சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா் ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுமியின் சடலத்தை மீட்டு, சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து, திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது, அடையாளம் தெரியாத நபா் ஒருவருடன் அன்று இரவு வா்ஷிதா சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மா்ம நபா் குறித்து விசாரணை மேற்கொண்டனா். மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளியைப் பிடிக்க போலீஸாா் அவருடைய படத்தை வெளியிட்டனா்.

இந்நிலையில், தம்பலப்பள்ளி அருகே உள்ள பசினிகொண்டாவைச் சோ்ந்த லாரி கிளீனா் முகமது ரபியைப் பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததை அவா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT