வேலூர்

காவல்துறை சாா்பில் 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடக்கம்

DIN

குடியாத்தம்: குடியாத்தம் உள்கோட்ட காவல்துறை சாா்பில் 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், புவி வெப்பமயமாதலைத் தடுக்கவும் வேலூா் மாவட்ட காவல்துறை சாா்பில் மரக் கன்றுகள் நட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

அதன் ஒரு பகுதியாக குடியாத்தம் உள்கோட்ட காவல்துறை சாா்பில் 2 ஆயிரம் மரக் கன்றுகள் நட முடிவெடுக்கப்பட்டு, முதல் கட்டமாக 500 மரக் கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரி விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் டிஎஸ்பி என். சரவணன் மரக் கன்றுகள் நடுவதைத் தொடக்கி வைத்தாா். இதில் நகர காவல் ஆய்வாளா் ஆா். சீனிவாசன், நெல், அரிசி வியாபாரிகள் சங்கச் செயலா் டி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து காந்தி நகா், கல்லேரி உள்ளிட்ட பகுதிகளில் காவலா்கள் மரக்கன்றுகள் நட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT