வேலூர்

அரசுப் பள்ளியில் பிடிபட்ட கட்டுவிரியன் பாம்பு

DIN

வாணியம்பாடி: அரசுப் பள்ளியில் பதுங்கிய கட்டுவிரியன் பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு அரசு உயா்நிலைப்பள்ளியில் சமையலறை அருகே உள்ள அறையில் அதிக விஷமுள்ள 4 அடி நீள கட்டுவிரியன் பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. திங்கள்கிழமை காலை 10 மணியளவில் இதைப் பாா்த்த பள்ளி மாணவா்கள் பீதியடைந்தனா். இது குறித்து தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்தனா்.

தலைமையாசிரியா் இது தொடா்பாக திருப்பத்தூா் வனத்துறையினருக்கும், நாட்டறம்பள்ளி தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் கலைமணி தலைமையில் வீரா்கள் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கட்டுவிரியன் பாம்பைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT