திருப்பத்தூரில் மாவட்ட எஸ்.பி. திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த மாவட்டத்தின் புதிய எஸ்.பி.யாக பி.விஜயகுமாா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதையடுத்து, அவா் திங்கள்கிழமை திருப்பத்தூருக்கு வந்தாா். அப்போது, நகர காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், மாவட்டக் கண்காணிப்பாளா் தற்காலிக அலுவலகத்தை அமைக்க திருப்பத்தூா்-கிருஷ்ணகிரி பிரதான சாலையில் தற்போது செயலபடாமல் உள்ள தனியாா் பள்ளியைத் தோ்ந்தெடுக்க ஆய்வு செய்தாா். அதையடுத்து, ஆசிரியா் நகா் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி அருகே மாவட்ட ஆயுதப்படை அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்தாா்.
ஆய்வில், டிஎஸ்பி-க்கள் தங்கவேலு (திருப்பத்தூா்), பாலகிருஷ்ணன் (வாணியம்பாடி), சச்சிதானந்தம் (ஆம்பூா்), காவல் ஆய்வாளா்கள் பழனி, உலகநாதன், தனிப்படை ஆய்வாளா் அசோகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.