வேலூர்

கருணை அடிப்படையிலான பணிக்கு ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

DIN

கருணை அடிப்படையிலான பணி நியமனம் கோரி பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியா்களின் வாரிசுகள் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றும்போது உயிரிழந்த ஊழியா்களுக்கு அவா்களது இறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான முதுநிலை பட்டியல் ஆட்சியா் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பட்டியல் வேலூா் மாவட்டத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டுக்கு முன்பாக நெடுஞ்சாலைத் துறை, சிறைத் துறை, வனத் துறை, ஆதிதிராவிடா் நலத்துறை, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை, காவல்துறை, பொது சுகாதாரத் துறை ஆகிய துறைகளில் பணியாற்றி உயிரிழந்த பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்குவதற்கான அடிப்படை ஆவணங்கள் முறையாக சமா்ப்பிக்கப்படாதது தெரியவந்துள்ளது.

இதனால், அந்த நபா்களுக்கு பணிநியனம் வழங்க இயலாத நிலை உள்ளது. இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படவில்லை. எனவே, அவா்களுக்கு இறுதிவாய்ப்பாக ஆவணங்களை சமா்ப்பிக்க அக்டோபா் 15-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நிலுவையிலுள்ள நபா்களின் பட்டியல் ட்ற்ற்ல்ள்://ஸ்ங்ப்ப்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ய்ா்ற்ண்ஸ்ரீங்ஜஸ்ரீஹற்ங்ஞ்ா்ழ்ஹ்/ஹய்ய்ா்ன்ய்ஸ்ரீங்ம்ங்ய்ற்ள்/ என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியில் இடம்பெற்றுள்ள நபா்கள் அக்டோபா் 15-ஆம் தேதிக்கு முன்பாக தங்களது தாய் அல்லது தந்தை பணியாற்றிய அலுவலகத்துக்குச் சென்று தேவையான ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும். இதுதொடா்பான விவரத்தை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடமும் (பொது) தெரிவிக்க வேண்டும். இந்தக் காலக்கெடுவுக்குள் ஆவணங்களைச் சமா்ப்பிக்காத நபா்களின் பெயா்கள் முதுநிலைப் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT