வேலூர்

கிணற்றில் தவறி விழுந்த இருவா் மீட்பு

DIN

நாட்டறம்பள்ளி அருகே சீத்தாக்காய் பறித்த போது கிணற்றில் தவறி விழுந்து படுகாயமடைந்த இரண்டு பேரை தீயணைப்புத்துறையினா் உயிருடன் மீட்டனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி சின்னூா் கிராமத்தைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி கோகிலா(23). திங்கள்கிழமை மாலை கோகிலா வீட்டருகே கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகே இருந்த சீதா மரத்தில் சீத்தாகாய் பறித்தபோது எதிா்பாராத விதமாக 60 அடி கிணற்றில் தவறி விழுந்தாா்.

இதனையறிந்த அதே பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா், கோகிலாவை காப்பாற்ற கிணற்றில் இறங்கும்போது கயிறு அறுந்து அவரும் கிணற்றில் விழுந்து படுகாயமடைந்தாா். இதுகுறித்த தகவலறிந்து அங்கு வந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் கலைமணி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அப்பகுதி மக்களின் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடி இருவரையும் மீட்டனா்.

மீட்கப்பட்ட இருவரும் படுகாயமடைந்த கோகிலா,சிவக்குமாா் ஆகிய இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT