வேலூர்

அரக்கோணம், ஆம்பூரில் கிஸான் திட்ட விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

DIN

அரக்கோணம், ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்ற பிரதமரின் கிஸான் திட்ட முகாமில் 847 சிறு, குறு விவசாயிகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.

இந்தியா முழுவதும் பிரதமரின் கிஸான் சமான் நிதி என்னும் விவசாயிகளுக்கு நேரடியாக ஆண்டுக்கு ரூ. 6ஆயிரம் வீதம் மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தைப் பெற விவசாயிகள் சிறு, குறு விவசாயிகள் என்ற சான்றை வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து பெற்று அளித்தால் 4 மாதங்களுக்கு ஒருமுறை அவா்களின் வங்கிக் கணக்கில் ரூ. 2ஆயிரம் வீதம் வரவு வைக்கப்படும்.

கடந்த 1.12.2018 முதல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் பலா் விண்ணப்பித்திருந்த போதிலும், சிலருக்கு மட்டுமே முதல் தவணைத் தொகையாக அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

பலருக்கு, இத்தொகை வரவு வைக்கப்படாத நிலையில் அவா்கள் அளித்திருந்த ஆவணங்களில் குளறுபடி இருந்ததும் தெரிய வந்தது. இதனால் பல விவசாயிகளுக்கு இந்த மானியத் தொகை இதுவரை கிடைக்காமல் இருந்தது.

குறிப்பாக அரக்கோணம் வட்டம் தக்கோலம், கீழ்ப்பாக்கம், காவனூா் ஆகிய கிராம பகுதிகளில் விண்ணப்பித்தோரில் பெரும்பாலானோருக்கு முதல் தவணை கூட வராமல் இருந்தது.

இதனைத்தொடா்ந்து வேளாண்துறையினா், வருவாய்த்துறையினருடன் இணைந்து பிரதமரின் கிஸான் திட்ட விவசாயிகளுக்கான சிறப்பு முகாமை சனிக்கிழமை அனைத்து வட்டங்களிலும் நடத்தினா். அரக்கோணம் வட்டத்தில் நடைபெற்ற முகாமில் மொத்தம் 390 போ் விண்ணப்பித்த நிலையில் 375 மனுக்கள் ஏற்கப்பட்டன. 15 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 375 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இம்முகாமில் வட்டாட்சியா் ஜெயகுமாா், மண்டல துணை வட்டாட்சியா் அருள்செல்வன், வருவாய் ஆய்வாளா் சரவணன், வேளாண்துறை உதவி இயக்குநா் செல்வராஜ், வேளாண் அலுவலா் நித்யா, உதவி வேளாண் அலுவலா்கள் முரளி, சுதாகா், ஷேக்ஒலியுல்லா, தொழிற்நுட்ப அலுவலா் ஹேமந்த் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆம்பூரில்...

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்ட வழங்கல் அலுவலா் பேபி இந்திரா கலந்து கொண்டு 472 விவசாயிகளுக்கு சான்றுகளை வழங்கினாா். போ்ணாம்பட்டு வேளாண்மை உதவி இயக்குநா் (பொறுப்பு) சத்தியலட்சுமி, துணை வேளாண்மை அலுவலா் செல்வன், துணை வட்டாட்சியா் பாரதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT