வேலூர்

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

DIN

வாணியம்பாடி நகர போக்குவரத்து காவல்துறை மற்றும் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சங்கத் தலைவர் மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் பீமாராவ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். 
பேரணியில் வாணியம்பாடி சுற்றியுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் 200}க்கும் மேற்பட்டோர்சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த பதாகைகளை கையில்  ஏந்தியவாறு, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப்பேரணி சி.எல்.சாலை, காதர்பேட்டை, மலங்கு ரோடு என முக்கிய வீதிகளின் வழியாகச் சென்றது. 
பேரணியில் ரோட்டரி சங்க செயலர் பாலசுப்பிரமணியம், சமுதாய வளர்ச்சி அலுவலர் பூபதி, சங்க பயிற்றுநர் சக்கரவர்த்தி, முத்தமிழ் மன்றச் செயலர் பிரகாசம் மற்றும் போக்குவரத்துக் காவல்துறையினர், ரோட்டரி சங்க நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT