வேலூர்

குடிமராமத்துப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

DIN


பேர்ணாம்பட்டு வட்டத்தில்  உள்ள 2 ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அ. சண்முகசுந்தரம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
பேர்ணாம்பட்டு வட்டம்,  ராஜக்கல் ஊராட்சியில் உள்ள கல்லேரியில் ரூ. 4.18 லட்சத்திலும், செண்டத்தூர் ஊராட்சியில் உள்ள பொன்னியம்மன் ஏரியில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏரிகள் தூர்வாரப்பட்டு, கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. 
இப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கரைகளை பலப்படுத்தி அதில் பனை விதைகளை நடவு செய்யவும் அறிவுறுத்தினார். 
பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் செண்பகவள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

SCROLL FOR NEXT