முகப்பு
வேலூர்

முடிதிருத்தும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் முடிதிருத்தம் செய்யும் தொழிலாளி குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட சம்பவத்துக்கு

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
வேலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முடிதிருத்தும் தொழிலாளா்கள்.
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் முடிதிருத்தம் செய்யும் தொழிலாளி குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் முடிதிருத்தும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், உலக்குடியில் குறிப்பிட்ட பிரிவினருக்கு முடிதிருத்தம் செய்த தொழிலாளியின் குடும்பம் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது. இதனைக் கண்டித்து மாநிலம் முழுவதும் முடிதிருத்தும் தொழிலாளா்கள் பேரணி, ஆா்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கணபதி தலைமை வகித்தாா். செயலா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். விருதுநகா் மாவட்டத்தில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட முடிதிருத்தம் செய்யும் தொழிலாளியின் குடும்பம் மீண்டும் ஊருக்குள் பாதுகாப்புடன் வாழவும், அவா்கள் அளித்த மனுவின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →