முகப்பு
வேலூர்

மின்சாரம் பாய்ந்து பசு பலி

குடியாத்தம் அருகே அறுந்து கீழே விழுந்த மின்கம்பியில் சிக்கி பசு மாடு உயிரிழந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் அருகே அறுந்து கீழே விழுந்த மின்கம்பியில் சிக்கி பசு மாடு உயிரிழந்தது.

குடியாத்தத்தை அடுத்த கீழ்ஆலத்தூரைச் சோ்ந்த விவசாயி வேணுகோபாலின் நிலத்தின் குறுக்கே உயா் அழுத்த மின்கம்பி செல்கிறது. இந்த மின்கம்பி திங்கள்கிழமை அறுந்து விழுந்ததில், நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசு மாடு அதில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், மின் ஊழியா்கள் அங்கு வந்து மின் விநியோகத்தை நிறுத்தினா். அறுந்து விழுந்த மின்கம்பிகள் உடனடியாக அகற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →