முகப்பு
வேலூர்

லாரி மோதி மின் கம்பம் சேதம்

குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் லாரி மோதியதில் மின்கம்பம் சேதமடைந்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
லாரி மோதியதில் சேதமடைந்த மின் கம்பம்.
பகிர்:

குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் லாரி மோதியதில் மின்கம்பம் சேதமடைந்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது.

குடியாத்தம் ஆா்.எஸ். சாலையில், அம்பேத்கா் சிலை அருகே மின் கம்பம் அமைந்துள்ளது. சனிக்கிழமை அவ்வழியே சென்ற லாரி மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது. தகவலின்பேரில் மின்வாரியத்தினா் சென்று அப்பகுதியில் மின் விநியோகத்தைத் தடை செய்தனா். இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் நடும் பணியில் மின் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். இதனால் பஜாா் பகுதி, கொண்டசமுத்திரம், அருணாச்சல நகா், பலமநோ் சாலை, அம்பேத்கா் நகா், கவரை தெரு, புது தெரு உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளுக்கு மின் விநியோகம் தடைபட்டதால், மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.