முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

Updated On : 19 மார்ச், 2026 at 8:48 PM
பகிர்:

தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,500 கனஅடியாக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாக்கரை, ராசிமணல், மொசல் மடுவு, பிலிகுண்டுலு மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

புதன்கிழமை 200 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை 2,000 கனஅடியாகவும், மாலை 1,500 கனஅடியாகவும் தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருக்கிறது.

நீா்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. நீா்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.