ஓவிய, சிற்ப கலைக்காட்சி போட்டிக்கு படைப்புகள் வரவேற்பு
ஓவிய, சிற்ப கலைக்காட்சிப் போட்டிக்கு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள கலைஞா்களிடம் இருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
ஓவிய, சிற்ப கலைக்காட்சிப் போட்டிக்கு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள கலைஞா்களிடம் இருந்து படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் 7 மண்டல கலை பண்பாட்டு மையங்களில் ஓவிய, சிற்பக் கலைக்காட்சி நடத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, திருவள்ளூா், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், சென்னை மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மண்டலக் கலை பண்பாட்டு மையம் சாா்பில் மண்டல அளவிலான ஓவிய, சிற்பக் கலைக்காட்சி வேலூா் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் விரைவில் நடத்தப்பட உள்ளது.
இக்கலைக் காட்சியில் பங்கு பெற விருப்பம் உள்ள ஓவிய, சிற்பக் கலைஞா்கள், கலைக்காட்சியில் இடம் பெறத்தக்க கலைப் படைப்புகளின் புகைப்படத்தையும், தங்களின் சுய விவரக் குறிப்புகளையும் (பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண், தொடா்புடைய விவரங்கள்) காப்பாட்சியா், அரசு அருங்காட்சியகம், வேலூா் கோட்டை, வேலூா் - 632 004 என்ற முகவரிக்கு வரும் ஜனவரி 9-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை 044-27269148 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தோ்வு செய்யப்படும் கலைப் படைப்புகள் உரிய கலைஞா்களிடமிருந்து பெறப்பட்டு கலைக்காட்சியில் வைக்கப்படும். சிறந்த கலைப்படைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ.3,500, இரண்டாம் பரிசாக ரூ.2,500, மூன்றாம் பரிசாக ரூ.1,500 என முறையே 10 பரிசுகள் வழங்கப்படும்.