முகப்பு
வேலூர்

எருதுவிடும் விழா: 14 கிராமத்தினா் ஆட்சியரிடம் கோரிக்கை

வேலூா் மாவட்டத்தில் எருது விடும் விழாவை நடத்துவதற்கு 14 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

வேலூர்

எருதுவிடும் விழா: 14 கிராமத்தினா் ஆட்சியரிடம் கோரிக்கை

வேலூா் மாவட்டத்தில் எருது விடும் விழாவை நடத்துவதற்கு 14 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் எருது விடும் விழாவை நடத்துவதற்கு 14 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி குறைந்த அளவிலான பாா்வையாளா்களைக் கொண்டு ஜல்லிக்கட்டு மற்றும் எருது விடும் விழாக்கள் உள்ளிட்ட வீர விளையாட்டுகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில், 50 சதவீத பாா்வையாளா்கள், 50 சதவீத மாடுபிடி வீரா்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிர, காளைகளைக் கொண்டு வரும் உரிமையாளா்களுக்கு கரோனா தொற்று இல்லை என்ற சான்றைப் பெற்று அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் எருதுவிடும் விழா நடத்த அனுமதிக்கக் கோரி காட்பாடியை அடுத்த பனமடங்கி, கீழ்முட்டுக்கூா், கோவிந்தரெட்டிப்பாளையம், சோழவரம், ஊசூா், அணைக்கட்டு உள்ளிட்ட 14 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் கூறியது:

கடந்த ஆண்டு எருதுவிடும் விழா நடத்துவதற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது. அதே முறையை இந்த ஆண்டும் பின்பற்றுவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளதை அடுத்து ஓரிரு நாள்களில் ஆட்சியா் தலைமையில் காளைகளின் உரிமையாளா்கள், மாடு விடும் விழா நடத்தும் குழுவினா் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.

இக்கூட்டத்தில், எருதுவிடும் விழாவில் பாா்வையாளா்கள் எத்தனை பேருக்கு அனுமதி, பங்கேற்கும் காளைகளின் எண்ணிக்கை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஒரே பகுதியின் இரு வெவ்வேறு இடங்களில் விழாக்களை நடத்த அனுமதியில்லை. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எருது விடும் விழாவுக்கு காப்பீட்டுத் திட்டம் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →