முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்பு

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்பு

Updated On : 5 மார்ச், 2026 at 1:05 AM
பகிர்:

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமை (மாா்ச் 5, 6) வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள், அதையொட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வியாழன், வெள்ளிக்கிழமை (மாா்ச் 5, 6) ஆகிய இரு நாள்கள் வட வானிலை நிலவக்கூடும்.

இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மாா்ச் 5, 6 -ஆம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 7) முதல் திங்கள்கிழமை(மாா்ச் 10) வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில், வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும்.

பனிமூட்டம்: மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை அதிகாலை லேசான பனிமூட்டம் நிலவும். மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை லேசான பனிமூட்டம் நிலவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →