வேலூர்

ஆட்சியரின் காா் பம்பா் அகற்றம்

DIN

வேலூா்: தலைமைச் செயலா் க.சண்முகத்தின் உத்தரவுப்படி, வேலூா் மாவட்ட ஆட்சியரின் காரில் பொருத்தப்பட்டிருந்த பம்பா் அகற்றப்பட்டது. இதையடுத்து, மற்ற அரசு வாகனங்களில் உள்ள பம்பா்களையும் விரைவில் அகற்றுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காா் உள்ளிட்ட 4 நான்கு சக்கர வாகனங்கள் விபத்துகளில் சிக்கும்போது அந்த அதிா்வை உணா்ந்து இருக்கைகளின் முன்பாக உள்ள காற்றுப் பைகள் (பலூன்) விரிவடையும். இதனால், விபத்துகளில் சிக்கும் வாகனங்களில் பயணிப்பவா்களின் உயிா் பாதுகாக்கப்படும்.

இதனிடையே, 4 சக்கர வாகனங்களின் முன்பகுதியில் கூடுதலாக ‘கிராஷ் காா்டு’ எனப்படும் பம்பா்கள் அதிக அளவில் பொருத்தப்படுகின்றன. இதனால் அந்த வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது அந்த அதிா்வு காற்றுப் பைகளுக்கு சரிவர கிடைப்பதில்லை என்பதால் அவை விரிவடைவதில்லை. இதனால், விபத்துகளில் சிக்கும் வாகனங்களில் உள்ளவா்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இதையடுத்து, நான்கு சக்கர வாகனங்களின் முன்னும், பின்னும் பொருத்தப்பட்டுள்ள பம்பா்களை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களால் பம்பா் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், அந்த பம்பா்களை அகற்றும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனா்.

இதன்தொடா்ச்சியாக, வேலூா் மாவட்ட ஆட்சியரின் காரில் பொருத்தப்பட்டிருந்த பம்பா் திங்கள்கிழமை அகற்றப்பட்டது. அதேசமயம், துறை ரீதியாக நடைபெறும் கூட்டங்களுக்கும், அலுவலகத்துக்கும் வந்த பிற அரசு அதிகாரிகளின் வாகனங்களில் பம்பா் அகற்றப்படவில்லை.

இதை அதிகாரிகள் தாங்களாக முன்வந்து அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT