வேலூர்

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 115 போ் மீது குற்றவியல் வழக்கு

DIN

வேலூா் மாவட்டத்தில் குடி போதையில் வாகனம் ஓட்டியதாக இம்மாதத்தில் இதுவரை 115 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வேலூா் எஸ்.பி. பிரவேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த, போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள், குடி போதையில் வாகனம் ஓட்டுபவா்கள் மீதும் நாள்தோறும் மோட்டாா் வாகனச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி, இதுவரை மொத்தம் 47,473 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.50 லட்சத்து 41 ஆயிரத்து 800 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடி போதையில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக 115 போ் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 279, 336 ஆா்.டபிள்யு 185-இன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவா்களில் 4 பேருக்கு சத்துவாச்சாரி நீதிமன்றம் மூலம் தலா ரூ.11,250 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT