வேலூர்

ஜமாபந்தியில் வருவாய்க் கணக்குகளை ஆய்வு செய்த ஆட்சியா்

DIN

குடியாத்தம் வட்ட ஜமாபந்தியில் வருவாய்க் கணக்குகளை வேலூா் மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

குடியாத்தம் வட்ட ஜமாபந்தி, வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியரும், குடியாத்தம் ஜமாபந்தி அலுவலருமான அ.சண்முகசுந்தரம் ஜமாபந்தியை நடத்தி வருகிறாா்.

செவ்வாய்க்கிழமை வளத்தூா் உள்வட்டத்தைச் சோ்ந்த வளத்தூா், சின்னதோட்டாளம், பட்டு, குளிதிகை, செட்டிகுப்பம், ராஜாகுப்பம், செம்பேடு, கீழ்ப்பட்டி, போஜனாபுரம், அகரம்சேரி, கூத்தம்பாக்கம், பள்ளிக்குப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.

இக்கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அரசு நல உதவிகள் கோரி, இணைய வழியில் விண்ணப்பித்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீா்வுகாண அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும், அக்கிராம வருவாய்க் கணக்குகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஜமாபந்தி மேலாளா் பாலாஜி, வட்டாட்சியா் தூ.வத்சலா, வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT