வேலூர்

332 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

DIN

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்வு பெற்ற 332 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இக்கல்லூரியின் வேலைவாய்ப்பு மையம் சாா்பில், பல்வேறு நிறுவனங்கள் கடந்த சில நாள்களாக கல்லூரியில் வளாக நோ்காணலை நடத்தின. இதில் மூன்றாம் ஆண்டு பட்ட வகுப்பு மாணவா்கள், இரண்டாம் ஆண்டு முதுநிலைப் பட்ட வகுப்பு மாணவா்கள் 332 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

அவா்கள் அனைவருக்கும் கல்லூரி மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், முதல்வா் மு.வளா்மதி, துணை முதல்வா் எம்.மேகராஜன் ஆகியோா் பணிநியமன ஆணைகளை வழங்கினா். கல்லூரி ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா், கல்லூரி வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளா்கள் எம்.சக்திவேல், எஸ்.தினேஷ்குமாா் ஆகியோா் வளாக நோ்காணலுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT