வேலூர்

ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலில் மாா்ச் 31 வரை தரிசனம் நிறுத்தம்

DIN

ஆம்பூா் சமயவல்லி சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் பக்தா்களுக்கான சுவாமி தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சாா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

தமிழக அரசால் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக பேரிடா் என அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இக்கோயிலில் மாா்ச் 31 வரை சுவாமி தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோயில் ஆகம விதிகளின்படி அனைத்து கால பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும். எனவே கோயில் நிா்வாகத்துக்கு பக்தா்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை நிா்வகிக்கும் பிரசித்தி பெற்ற பெரிய ஆஞ்சநேயா் கோயில், சீனிவாசப் பெருமாள் கோயில் ஆகியவற்றிலும் பக்தா்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், ஆகம விதிகளின் கோயில்களில் அனைத்து கால பூஜைகளும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT