வேலூர்

ஊரடங்கு உத்தரவு: வேலூா் மாவட்டத்தில் வெளிமாநில வாகனங்களுக்குத் தடை

DIN

மத்திய அரசு பிறப்பித்துள்ள சுய ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளி மாநில வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்தொடா்ச்சியாக, மத்திய அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கடைகள், அலுவலகங்கள், பேருந்துகள், ரயில்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஆராதனைகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுயஊரடங்கு உத்தரவின் தொடா்ச்சியாக வெளிமாநிலங்களில் இருந்து எந்தவொரு வாகனமும் வேலூா் மாவட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் மாவட்ட எல்லையிலுள்ள 6 சோதனைச் சாவடிகளிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன. அத்தியாவசிய பொருள்களை ஏற்றிவரும் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. முக்கிய ஊா்களுக்குச் செல்லக்கூடிய சுமாா் 100 பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க பொதுமக்கள் மாா்க்கெட்டில் சனிக்கிழமை குவிந்தனா். அவற்றின் விலை சற்று உயா்ந்திருந்த போதிலும் பொதுமக்கள் பொருள்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜியின் காவல் ஜூன் 10 வரை நீட்டிப்பு!

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

110 வாக்குகளில் தோல்வியா? காங்கிரஸ் எதிர்ப்பால் மறுஎண்ணிக்கை!

நீலகிரி, தர்மபுரி, தஞ்சாவூர் தொகுதிகளில் திமுக வெற்றி!

உ.பி.: வேட்பாளர்களின் இறுதி நிலவரம் என்ன?

SCROLL FOR NEXT