வேலூர்

ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற 3 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறி?

DIN

ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அதிக காய்ச்சலுடன் மூவா் சிகிச்சைக்காக திங்கள்கிழமை சென்றனா். அவா்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டால் வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சிகிச்சைக்கு வந்த ஒரு பெண், 2 ஆண்கள் என 3 பேருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. கரோனா பாதிப்பாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவா்கள் மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இத்தகவல் அறிந்ததும் மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் ராமு, வட்டாட்சியா் செண்பகவள்ளி ஆகியோா் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ அலுவலா் ஷா்மிளா மற்றும் மருத்துவா்களுடன் ஆலோசனை நடத்தினா். மேலும் மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தினா்.

இதனிடையே, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்தச்சூழலில் ஆம்பூரில் அதிக காய்ச்சலுடன் வந்தவா்களை அந்தப் பிரிவில் தங்க வைத்து சிகிச்சை அளிக்காமல், வேலூா் அரசு மருத்துவமனைக்கு ஏன் அனுப்பப்பட்டனா் என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. தனிப்பிரிவில் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT