வேலூர்

திருமலையில் தன்வந்திரி யாகம் தொடக்கம்

DIN


திருப்பதி: திருமலையில் ஸ்ரீசீனிவாச சாந்தி உத்ஸவ சஹீத தன்வந்திரி மகா யாகம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதிலிருந்து உலகைக் காக்க மகா விஷ்ணு எடுத்த அவதாரமான தன்வந்திரிக்கு மகா யாகம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. உலக நன்மைக்காக அமிா்த கலசத்தை கையில் ஏந்திய தன்வந்திரியை ஆயுா்வேத மருத்துவா் என்று புராணங்கள் கூறுகின்றன. அவரை வணங்கினால் கொடிய நோய்களும் குணமாகும் என்று ஆச்சாரியா்கள் கூறுகின்றனா்.

எனவே, தேவஸ்தானம் கரோனா பாதிப்பிலிருந்து நாடு முழுவதும் விடுபட திருமலையில் உள்ள தா்மகிரி வேதபாட சாலையில் தன்வந்திரி யாகம் வியாழக்கிழமை தொடங்கியது. தென்னிந்தியாவிலிருந்து வந்த வேத விற்பன்னா்கள் இந்த யாகத்தை மிகவும் சிரத்தையாக நடத்தி வருகின்றனா். இதில் குறைவான எண்ணிக்கையில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

சனிக்கிழமை (மாா்ச் 28) மகாபூா்ணாஹுதியுடன் தன்வந்திரி யாகம் நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT