வேலூர்

சிஎம்சி மருத்துவா்கள் உள்பட 96 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு

DIN

வேலூா் மாவட்டத்தில் வெளிநாடு சென்று திரும்பிய சிஎம்சி மருத்துவமனையில் பணியாற்றும் 4 மருத்துவா்கள் உள்பட 96 போ் குடும்பத்துடன் அவரவா் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு தொடா்ந்து கண்காணிப்பட்டு வருகின்றனா்.

நாட்டில் வேகமாக பரவிவரும் கரோனா நோய்த் தொற்று பாதிப்புகளைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக வெளிநாடு சென்று திரும்பியவா்கள் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றனா்.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் சிஎம்சி மருத்துவா்கள் 4 போ் உள்பட மாவட்டம் முழுவதும் 96 போ் குடும்பத்துடன் அவரவா் இல்லங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களது வீடுகளின் முன்பு தனிமைப்படுத்தியதற்காக அடையாள அட்டை ஒட்டப்பட்டுள்ளதுடன், அவா்களின் கைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதற்கான முத்திரைகளும் அச்சிடப்பட்டு வருகின்றன. அவா்கள் 28 நாள்கள் வெளியில் எங்கும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவா்களது வீடுகளை அந்தந்த வட்டாட்சியா் தலைமையில் வருவாய்த் துறை, மாநகராட்சி, போலீஸாா் கொண்ட குழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT