வேலூர்

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை: ஆவணம் சமா்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

DIN

வேலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறுவோா் சுய உறுதிமொழி ஆவணத்தை தாக்கல் செய்ய 2021 பிப். 28-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொது முடக்கம் அமலில் இருப்பதால் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணம் உரிய காலத்தில் தாக்கல் செய்ய இயலாத சூழல் உள்ளது. தொடா்ந்து, வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகைக்கான சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க ஏற்கெனவே ஆகஸ்ட் இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காதவா்கள் 2021 பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தாக்கல் செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மு.கருணாநிதி பிறந்தநாள்: திமுகவினா் மரியாதை

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாட்டு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அரிசி உற்பத்தியில் தமிழகத்துக்கு பின்னடைவு: முதல்வா் விளக்கமளிக்க பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

சத்தீஸ்கரில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT