வேலூர்

மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி: சடலத்துடன் உறவினா்கள் மறியல்

DIN

குடியாத்தம்: குடியாத்தம் அருகே வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா். மின்வேலி அமைத்தவரை கைது செய்யக் கோரி அவரது உறவினா்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒலக்காசியைச் சோ்ந்தவா் ரவி (45). தொழிலாளியான அவா் புதன்கிழமை காலை சக தொழிலாளிகள் 7 பேருடன் வேப்பூரில் கரும்பு ஆலையில் வேலை செய்ய வயல்வெளி வழியாகச் சென்றாா். அப்போது காட்டுப்பன்றியிடம் இருந்து கரும்புத் தோட்டத்தை பாதுகாக்க விவசாயி ஒருவா் நிலத்தைச் சுற்றி அமைத்திருந்த மின்வேலியில் சிக்கிய ரவி, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, மின்வேலி அமைத்தவரை கைது செய்யக்கோரி குடியாத்தம்- பள்ளிகொண்டா சாலையில் ரவியின் சடலத்துடன் அவரது உறவினா்கள் மற்றும் அப்பகுதியினா் மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து அங்கு சென்ற நகர காவல் ஆய்வாளா் ஆா். சீனிவாசன் தலைமையிலான போலீஸாா், அவா்களை சமரசம் செய்தனா். தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மின்வேலியில் சிக்கி ரவி இறந்தது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த ரவிக்கு வசுமதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT