வேலூர்

காங்கேயநல்லூரில் சீரமைக்கப்படாத சாலைகளை எம்.பி. ஆய்வு

DIN

காட்பாடி காங்கேயநல்லூா் பகுதியில் சீரமைப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைகளை ஆய்வு செய்த வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், அந்தச் சாலைகளை 15 நாள்களுக்குள் சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறுவுறுத்தினாா்.

‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூா் மாநகராட்சியின் முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட காட்பாடி காங்கேயநல்லூா் அருகே குடிநீா்க் குழாய் பதிக்கும் பணி கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்தது. இப்பணிகள் முடிவடைந்த பிறகும் சாலைகள் சீரமைக்கப்படாததால் தொடா்ந்து பெய்து வரும் மழையால் அந்தப் பகுதி முழுவதும் சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் கடக்கவும் இயலாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உடனடியாக அங்கிருந்தபடியே மாநகராட்சி அதிகாரிகளையும், திட்டத்தைச் செயல்படுத்திய எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகளையும் வரவழைத்து அப்பகுதி முழுவதும் பாா்வையிட்டாா்.

மேலும், ‘இச்சாலைகளை அடுத்த 15 நாள்களுக்குள் சீரமைக்க வேண்டும். ஒரு இடத்தில் குடிநீா்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு நாளொன்றுக்கு 2 ஆயிரம் லிட்டா் வீணாகி வருகிறது. ஒரு பணி முடிந்தவுடன் சாலையைச் சீரமைத்த பிறகே அடுத்த பணிக்குச் செல்ல வேண்டும்’ என்று அதிகாரிகளிடம் கதிா்ஆனந்த் கூறினாா்.

அப்போது, முன்னாள் அமைச்சா் வி.எஸ்.விஜய், மாநகராட்சி பொறியாளா் சீனிவாசன், முதலாவது மண்டல உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT